Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   996-நெஞ்சம் நிறைந்ததே  

நெஞ்சம் நிறைந்ததே
அன்பில் நனைந்ததே
இன்பம் மலர்ந்ததே - இந்நாளிலே
என்வாழ்விலே.. ஆ.ஆ.பொன்நாளிதே
நன்றி என்ற நல்ல தமிழ் என்நாவிலே
நன்றி.. நன்றி.. நன்றி.. நன்றி.. இறைவா
நன்றி.. நன்றி.. நன்றி.. நன்றி.. தலைவா

சிகரத்தை நோக்கி நடத்தி வந்தாய்
செல்வம் கோடி வாழ்வில் தந்தாய்
அறுகம் புல்லாய் நானிருந்தேன்
ஆலமரமாய் எனை வளர்த்தாய்
எனது வாழ்வில் உதயம் நீ
எந்தன் இதயத் துடிப்பும் நீ

தடுக்கி விழுந்தேன் கரம் கொடுத்தாய்
தாயைப்போல தாங்கி நின்றாய்
கடந்த பாதையில் உடன் நடந்தாய்
காலம்முழுதும் உடனிருப்பாய்
வலது கரமும் ஆனதும் நீ
வலிமை எனக்குத்; தந்ததும் நீ



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்