995-நெஞ்சம் நிறைந்த நன்றி |
நெஞ்சம் நிறைந்த நன்றி சொல்லி உம்மை வாழ்த்திப் பாடுவேன் வாழ்வில் செய்த நன்மைகளை நினைத்து நன்றி கூறுவேன் இதயம் மகிழுதே என் மனம் போற்றுதே கோடி நன்றிபாடி உந்தன் பாதம் பணிந்து வணங்குவேன் வாழ்வு தந்த தந்தையே என்னைத் தேர்ந்த இயேசுவே ஆற்றல் தந்த ஆவியே நன்றி என்றும் நன்றியே வாழ்வின் பாதையில் உடன் வந்த தெய்வம் நீ வாடும் வேளையில் எனைத் தேற்றும் தெய்வம் நீ சாய்ந்த போதெல்லாம் கரம் தந்த தெய்வம் நீ மார்பில் அணைத்து மகுடம் தந்து காத்த தெய்வம் நீ தாயின் கருவிலே என்னைத் தேர்ந்த தெய்வம் நீ அருள்பணியில் ஆலயம் பல தந்த தெய்வம் நீ உயிர்ப்பின் ஆனந்தம் மண்ணில் தந்த தெய்வம் நீ கருணை தேவன் பணியில் மகிழ அழைத்த தெய்வம் நீ |