994-நீர் செய்த நன்மையெல்லாம் |
நீர் செய்த நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லுவேன் நீர் கண்ட கனவெல்லாம் நனவாக நானுழைப்பேன் இயேசுவே உம் நினைவாக எந்நாளும் வாழுவேன் (2) ஏழையென்று வெறுக்கவில்லை பாவியென்று ஒதுக்கவில்லை பெண்ணென்று மிதிக்கவில்லை தாழ்ந்தவனென்று பழிக்கவில்லை (2) உம் மனதாய் என் மனது ஆகணும் உம் வாழ்வாய் என் வாழ்வு மாறணும் இயேசுவே இயேசுவே - அதனால் உம் கனவு பலிக்கணும் துன்பங்கண்டு துடிதுடித்தீர் இன்பங்கண்டு மகிழ்ந்து நின்றீர் பசிகண்டு பரிதவித்தீர் தாகங் கண்டு தவித்து நின்றீர் (2) உம்மைப் போல நானும் இங்கு ஆகணும் அதனால் நான் பிறர் துன்பம் ஏற்கணும் இயேசுவே இயேசுவே - அதனால் உம் கனவு பலிக்கணும் |