Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   993-நீதானே என் கீதம் இறைவா  
நீதானே என் கீதம் இறைவா - உன்
நினைவே என் சங்கீதம் தலைவா
நிறை வாழ்வு நான் காண
வரம் வேண்டுமே - இனி
நிதம் எந்தன் வாழ்வு
உன் பணிக்காகவே

ஒரு கோடி மலருண்டு உன் தாழிலே - அது
ஒரு பூவாய் இணைந்தாலே மணம் வீசுமே (2)
எழிலான சுரம் கோடி உன் யாழிலே - 2 - அது
நரம்பாக இணைந்தாலே மனம் பாடுமே

அழகான கனவொன்று என் நெஞ்சிலே - அது
அன்பாலே நிறைகின்ற உலகாகுமே (2)
இதற்காகத்தானே நீ மனுவாகினாய் - 2 - இன்று
என் வாழ்வை அதற்காகப் பலியாக்கினேன்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்