992-நீ செய்த நன்மை |
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா இறைவா - 2 - 2 உண்டிட உணவும் உடையும் கொடுத்து ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் - 2 ஒரு அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2 மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்ற மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் உடன் உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல் களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2 என்னுடைய இதய வயலுமே செழிக்க இனியவர் சிலரை அனுப்பி வைத்தாய் அவர் அன்பெனும் நீரிலும் அருங்குண ஒளியிலும் அனுதினம் என்னை வளரவைத்தாய் - 2 நிலத்தினில் விதைத்த விதைகள் முளைத்து நிறைவுடன் வளர்ந்து தழைக்க விட்டாய் இன்று பலன்தரும் விளைச்சலில் பசி, பிணி மறந்து பாரினில் என்னைப்பிழைக்க வைத்தாய் - 2 |