990-நாளெல்லாம் இங்கே |
நாளெல்லாம் இங்கே நீ செய்த நன்மைக்கு நன்றி என் யேசுவே நாதன் நீ எனக்கு தந்திட்ட வாழ்வுக்கு நன்றி என் யேசுவே நன்றி என் யேசுவே நன்றி நன்றி என் யேசுவே (2) வறிய எனது வாழ்..வை மாற்றினாய் நன்றி என் யேசுவே நோய்கள் நீக்கி நலமே காத்தாய் நன்றி என் யேசுவே உனது கரத்தால் என்னைத் தாங்கினாய் நன்றி என் யேசுவே எனது வா.ழ்வை மாற்றி அமைத்தாய் நன்றி என் யேசுவே நன்றி என் யேசுவே நன்றி நன்றி என் யேசுவே (2) பகைவர் இடத்தில் நின்றெனைக்காத்தாய் நன்றி என் யேசுவே பகைமை இல்லா இதயம் தந்தாய் நன்றி என் யேசுவே அன்பு வாழ்வை என்னுள் தந்தாய் நன்றி என் யேசுவே அயலார் வாழ்வை மதிக்கச் செய்தாய் நன்றி என் யேசுவே நன்றி என் யேசுவே நன்றி நன்றி என் யேசுவே (2) |