Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   989-நாமணக்குது இயேசு என்னும்  
நாமணக்குது இயேசு என்னும் நாமம் சொன்னாலே
நெஞ்சினிக்குது இயேசுவுக்கு நன்றி சொன்னாலே (2)
தந்தானே தந்தானா தந்தனத்தன்னா - 2 தந்தானே ஓ யா

ஆழ்கடலில் அலை நடுவே என் துணை நீயே
ஆதரவாய் வந்து கரை சேர்ப்பதும் நீயே
என்னை என்றும் வழி நடத்தும் ஆயனும் நீயே
புல்வெளிக்குக் கூட்டிச்சேர்க்கும் மேய்ப்பனும் நீயே
உன்னை விட்டுப் பிரிந்து ஏங்கித் தவிக்கும் வேளையில்
தேடி வந்து நீ என்னை சொந்தமாக்கினாய்
நன்மை யாவும் தந்த எந்தன் அன்பு தெய்வமே
நன்றி நன்றி என்று கோடி சிந்து பாடுவேன்

துன்பம் என்னைச் சூழ்ந்த போது துணையென நின்றாய்
அன்னை போல அருகிருந்து அடைக்கலம் தந்தாய்
அன்பு செய்து வாழ எனக்கு அறிவுரை தந்தாய்
பண்பில் என்றும் வாழப் பத்துக்கட்டளை தந்தாய்
அன்பினாலே உன்னை எனக்கு உணவெனத் தந்தாய்
என்றும் உந்தன் கண்மணிபோல் காத்திருக்கின்றாய்
வான் படை ஏழு தந்த இயேசு தேவனே
வாழி உந்தன் நாமம் என்று நன்றி சொல்லுவேன்





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்