987-நன்றியால் தினம் உம்மைப் |
நன்றியால் தினம் உம்மைப் போற்றிடுவோம் உம் புகழ் நாங்கள் பாடிடுவோம் (2) உமது அன்பைத் தினம் எண்ணி உமக்கு நன்றிப்பண் பாடிடுவோம் நன்றியால் தினம் உம்மைப் போற்றிடுவோம் நன்றி - நன்றி - நன்றி - நன்றி (2) ஆண்டவர் வழியில் நாம் நடந்தால் அவரின் கருணை நமக்குண்டு உண்மை அன்பினில் வழிநடக்கும் இறைவனைத் தினமும் போற்றிடுவோம் ஆண்டவர் செயல்களைக் கண்டு கொண்டால் உள்ளம் மெழுகென உருகிடுமே உண்மைப் பாதையில் வழி நடக்கும் உமது முறைமையைக் கண்டுகொண்டேன் |