Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   986-நன்றியால் உள்ளம் மகிழ்ந்தோம்  
நன்றியால் உள்ளம் மகிழ்ந்தோம் இறைவா
நன்றியால் உம்மைப் புகழ்ந்தோம்

அன்பினால் எம்மை ஒருங்கிணைத்தீர் ஆர்த்தெழும் குடும்பமாய் இணையவைத்தீர்
நன்றியால் உள்ளம் மகிழ்ந்தோம் இறைவா- நன்றியால் உம்மைப் புகழ்ந்தோம்

ஆயனாய் என்றுமே உடன் வந்தீ.ர் அருவியாய் நாளுமே அருள் பொழிந்தீர் (2)
நன்றியால் உள்ளம் மகிழ்ந்தோம் இறைவா -நன்றியால் உம்மைப் புகழ்ந்தோம்

வலிமை இழந்தவர் வாழ். வு கண்டிட நிறைவு அனுபவம் இயேசு தந்தீர்(2)
நன்றியால் உள்ளம் மகிழ்ந்தோம் இறைவா -நன்றியால் உம்மைப் புகழ்ந்தோம்

அருமைப் பண்பினை தனிமரமாக்கினீர் கனிந்த இதயம் கொண்டிடப்பணித்தீர்
அருமைப் பண்பினை தனிமரமாக்கினீர் கனிந்த இதயம் கொண்டிடப்பணித்தீர்
நன்றியால் உள்ளம் மகிழ்ந்தோம் இறைவா -நன்றியால் உம்மைப் புகழ்ந்தோம்

தனிப் பெரும் சபையாய் மிளிர வைத்தீர் தரணியில் ஆண்டுகள் காண வைத்தீர்
தனிப் பெரும் சபையாய் மிளிர வைத்தீர் தரணியில் ஆண்டுகள் காண வைத்தீர்
நன்றியால் உள்ளம் மகிழ்ந்தோம் இறைவா நன்றியால் உம்மைப் புகழ்ந்தோம்

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்