985-நன்மை செய்த தேவனுக்கு |
நன்மை செய்த தேவனுக்கு நன்றி கூறுவோம் நாளும் நம்மைக் காப்பவர்க்கு நன்றி கூறுவோம் நன்றி நன்றி நல்ல யேசுவே - 4 நாளும் நம்மைக் காக்கின்றார் நலங்கள் வாழ்வில் தருகின்றார் நலிந்த மக்கள் யாவருக்கும் நம்பிக்கை தருகின்றார் (2) நாளை என்ற கவலை - இனித் தேவையில்லை இல்லை (2) நாளைய பொழுதும் பார்த்துக் கொள்வார் நாளும் பாடிடுவோம் (2) நன்றி நன்றி நல்ல யேசுவே - 4 நிழலாய் நம்மில் வருகின்றார் நிம்மதி வாழ்வில் தருகின்றார் நிதமும் நம்மைக் காத்திடவே நீங்கிடாமல் இருக்கின்றார் (2) பயந்த வாழ்வு நம்மில் - இனித் தேவையில்லை இல்லை (2) பரமன் யேசு காத்திடுவார் பாடியே துதித்திடுவோம் (2) நன்றி நன்றி நல்ல யேசுவே 4 |