984-நன்றியோடு பாடுகின்றோம் |
நன்றியோடு பாடுகின்றோம் நல் இயேசு நாயகனே இன்று வரை நீர் செய்த நன்மைகளை யாம் நினைக்கின்றோம் என்றென்றும் பாடுவோம் நாளும் நன்றி கூறுவோம் உன்னத இறைவனே உன்னன்பு நிறைவில் மண்ணில் மனிதனாய் உன் உருவைப் பதித்தாய் வாழ்வும் வளமும் நாளும் நலமும் பொழிந்து எம்மை காத்திடும் தந்தாய் வானம் வையம் காணும் யாவும் கடவுள் உந்தன் கரத்தின் கொடைகள் படைப்பின் இறைவா பாடுகின்றோம் நன்றி வாழ்வதும் இருப்பதும் இயங்குவதும் உம்மால் ஒவ்வொரு செயலும் உம்மருளின் துணையால் தன்னலமில்லா தியாகத்தின் முதல்வா உம்மையே எமக்காய் சிலுவையில் ஈந்தாய் ஏழை எளியோர் ஏற்றம் காண புவியில் புதிய வாழ்வு கொணர்ந்த அன்பின் இறைவா ஆயிரம் நன்றி |