983-நன்றி யேசுவே உமக்கு |
நன்றி யேசுவே உமக்கு நன்றி யேசுவே மனிதனைப் படைத்து மாண்பினைக் கொடுத்து என்னை இன்று வாழச் செய்யும் இறைவனை நான் பாடுவேன் ஓராயிரம் வார்த்தைகளில் தீராது எங்கள் நன்றி (2) கவலை கண்ணீர் போக்கி கண்ணின் மணிபோல் காத்தீர் (2) உருக்குலைந்த என்னை உருமாற்றி பலருககும் பயனளிக்கும் பகலவனாய் மாற்றினாய் பயணங்கள் நிறைவேற பாதையாய் நீயாகினாய் (2) பரந்து விரிந்த உலகில் பணிகள் செய்து வாழ்ந்திடுவேன் (2) பதரான என்னைப் பயனாக்கி ஒருகோடி ஓசைகளை இசையோடு நான் பாடினேன் என்னையே நன்றியாய் தருகின்றேன் இறைவா (2) |