Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   982-நன்றி நன்றி நன்றி இயேசுவே  

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே
நன்றி நன்றி நன்றி சொல்வோம் என்றும் இயேசுவே

நோயினால் வருந்தி உன் பாதம்
கண்ரோடு நான் வந்தேன்
அருமருந்தாகி சுகம் தந்து
என்னைக் காத்தாய் நன்றி ஐயா

வெறுமை தனிமை எனையழுத்த
அன்பைத் தேடி அலைந்தேன் நான்
தாயாய் தோழனாய் உடனிருந்து
அன்பைப் பொழிந்தாய் நன்றி ஐயா

குழந்தைப் பாக்கியம் இல்லாமல்
ஏச்சும் பேச்சும் நான் அடைந்தேன்
பேரைச் சொல்லும் குழந்தைவரம்
துள்ளிடச் செய்தாய் நன்றி ஐயா

குடியும் கடனும் அதிகமாகி
மனச்சுமையோடு நானும் வந்தேன்
மனக் குறை பணக்குறை நீக்கிடவே
நல்வழி காட்டினாய் நன்றி ஐயா

மருத்துவராலே இயலாமல்
கைவிடப்பட்டு துயருற்றேன்
அற்புதமாக நலம் தந்து
சாட்சியாய் மாற்றினாய் நன்றி ஐயா

ஒருவருக்கொருவர் குடும்பத்தில்
புரிதல் இன்றித் தனியானோம்
உம் திருவருளால் ஒன்றாகி
இல்லறம் இணைந்தோம் நன்றி ஐயா

படித்தும் வேலை இல்லாமல்
வாழ்வை இழந்து தடம் புரண்டேன்
நல்லதோர் வேலை வாய்ப்பினையே
தந்தாய் நன்றி நன்றி ஐயா

திருமண காரியம் நடந்தேற
தடைகள் பயமாய் வந்தாலும்
சுபமாய் எல்லாம் சுகமாகி
நல்வரன் தந்தாய் நன்றி ஐயா

தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெற்றிட வேண்டிப் படித்தேன் நான்
உழைப்பிற்கேற்ப மதிப் பெண்ணை
உயர்ந்திட தந்தாய் நன்றி ஐயா

பொருளாதார நெருக்கடியால்
குடும்பத்தோடு துயருற்றோம்
தேவைகள் எல்லாம் தீர்த்து எம்மை
வளம்பெறச் செய்தாய் நன்றி ஐயா




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்