Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   981-நன்றி நன்றி நன்றி இயேசுவே - என்றும்  
நன்றி நன்றி நன்றி இயேசுவே - என்றும்
நன்றி நன்றி நன்றி இயேசுவே

குழந்தை வயதில் தவழ்ந்தபோதெல்லாம் - என்
தாய் வழியாய் என்னைக் காத்தீரே
நட்புத் தேடி ஏங்கியபோதெல்லாம் - என்
நண்பனாகக் கூட வந்தீரே

அன்பைத் தேடி அலைந்த போதெல்லாம் - என்
துணைவராக என்னுள் நுழைந்தீரே
முயற்சி செய்தும் தோற்றபோதெல்லாம் - என்
தோழனாக உதவி செய்தீரே

துன்பக்கடலில் விழுந்த போதெல்லாம் - என்
தந்தையாக தோளில் சுமந்தீரே
நோய்கள் தாக்கி நொந்தபோதெல்லாம் - என்
மருத்துவராக விரைந்து வந்தீரே

பாவச்சேற்றில் புதைந்த போதெல்லாம் - என்
குருவின் வழியாய் அருளைத் தந்தீரே
முதுமை சிறையில் வாடும்போதெல்லாம் - என்
குழந்தை வடிவில் மடியில் சாய்ந்தீரே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்