Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   980-நன்றி நன்றி நல்ல தேவனே  
நன்றி நன்றி நல்ல தேவனே
நன்மை புரியும் வல்ல தெய்வமே - 2
ஏழு சுரங்களில்.. ஆகா
இனிய இராகத்தில்.. லலா
ஏற்றிப் போற்றிப் புகழ்ந்து பாடுவேன்

உந்தன் கைகளில் எனது பெயரையே
உரிமையாகப் பொறித்து வைத்தீரே - 2
முன்னும் பின்னுமே எங்கும் சூழ்ந்துமே
என்றும் என்னைப் பாதுகாத்தீரே - 2
நன்றி நன்றி நல்ல தேவனே

உந்தன் சிறகினில் என்னைச் சுமந்துமே
இறுகப் பற்றி அரவணைத்தீரே 2
எந்தன் திறமைகள் ஆற்றல் அனைத்துமே
உந்தன் அன்பால் உணரச் செய்தீரே 2
நன்றி நன்றி நல்ல தேவனே






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்