978-நன்றி நன்றி என்று சொல்லிப் |
நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவோம் நன்மை கோடி செய்யும் நல்ல தேவனை (2) உண்மையின் உறவில் நாளுமே வளர தமது அருளை நமக்குத் தருகின்றார் எந்நாளுமே வறண்ட பூமி வான் மழையைக் காணச் செய்பவர் வரமளித்து வாழ்வினிலே இனிமை சேர்ப்பவர் (2) நீதியோடு யாவருக்கும் தீர்ப்பளிப்பவர் - 2 பாவி கூட வருந்தும் போது மன்னித்தருள்பவர் இரக்கமுள்ளவர் இனிமையானவர் இன்றும் என்றும் மாறாமல் அன்பு செய்பவர் நன்றி நன்றி நன்றி இயேசுவே - 4 காடு கழனி வயலையெல்லாம் விளையச் செய்பவர் நாடு வீடு போற்ற நம்மை மகிழச் செய்பவர் (2) ஏழை சனம் காக்க இந்த பூமி வந்தவர் - 2 வாழையடி வாழையாக வாழவைப்பவர் இரக்கமுள்ளவர் இனிமையானவர் இன்றும் என்றும் மாறாமல் அன்பு செய்பவர் நன்றி நன்றி நன்றி இயேசுவே - 4 |