976-நன்றி நன்றி இறைவா |
நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி தலைவா எந்தன் வாழ்வில் எத்தனை நன்மைகள் எந்தன் மனதில் எத்தனை மகிழ்வுகள் எந்தன் நினைவில் எத்தனை உண்மைகள் நீர் என்னுள் வந்ததால் நான் செல்லும் பாதைகள் எல்லாம் துணையாய் நீர்வந்தீர் நான் உண்ணும் உணவை என்றும் நீர்தானே தந்தீர் நான் உறங்கும் வேளை எந்தன் காவல் நீர் நின்றீர் - 2 நான் வருந்தும் வேளை எந்தன் ஆறுதல் நீர் என்றீர் நான் தட்டும் நேரம் உந்தன் மனக்கதவைத் திறந்தீர் நான் கேட்கும் வேளை உந்தன் ஞானம் எனக்களித்தீர் நான் தேடும் போது எந்தன் இல்லம் நீர் வந்தீர் 2 நான் என்றும் நலமாய் வாழவும் அன்னையை நீர் தந்தீர் |