Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   975-நன்றி மலரெடுத்து  


நன்றி மலரெடுத்து நாதன் புகழ் பாட
நாவும் மகிழ்ந்திடுதே
இறைவா நன்றி - என்னில்
உறைந்திட இசைந்தீரே - 2

உருக்கொடுத்து என்னில் உயிர் அளித்து
உலகினில் வாழ வைத்தாய் (நன்றி நன்றி)
உன் உயிரைத் தந்து என்னைத்
தினம் தினம் காத்தமைக்கு (நன்றி நன்றி) - 2

உன் உறவில் நான் திளைத்திடவே
உறவாட என்னில் எழுந்தாய் (நன்றி நன்றி)
கொஞ்சிடும் குரல் கேட்டு எந்தன்
குறைகளைத் தீர்த்து வந்தாய் (நன்றி நன்றி) - 2






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்