Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   974-நன்றி பாடுவேன் இனிய இயேசுவே  
நன்றி பாடுவேன் இனிய இயேசுவே
வாழும் நாளெல்லாம் போற்றிப் பாடுவேன்
என்னைத் தேடியே வந்த தெய்வமே
என்றும் உன்னையே வாழ்த்திப் பாடுவேன் (2)
நன்றி நன்றி நன்றி இயேசுவே - 4

உயிரைத் தந்ததால் உருவம் தந்ததால்
உறவைத் தருவதால் நன்றி இயேசுவே
வாழ்வைத் தந்ததால் வளமும் தந்ததால்
வாழ வைப்பதால் நன்றி இயேசுவே
உந்தன் அன்பை என்றும் பெறுவதால்
உன்னில் என்னை இணையச் செய்வதால் (2)
உந்தன் பாதையில் எந்தன் பாதங்கள்
வழிநடக்க ஆசி தந்ததால்
நன்றி நன்றி நன்றி இயேசுவே

தாயுமானதால் தந்தையானதால்
நண்பன் ஆனதால் நன்றி இயேசுவே
எந்த நாளிலும் என்னில் வாழ்ந்திடும்
சொந்தமானதால் நன்றி இயேசுவே
மன்னிக்கின்ற மனதைத் தந்ததால்
மனித நேயச் சிந்தை தந்ததால் (2)
விடியல் நோக்கியே எந்தன் வாழ்வையே
அர்ப்பணிக்க ஆசி தந்ததால்
நன்றி நன்றி நன்றி இயேசுவே






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்