Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   972-நன்றி சொல்லி நாளும் பாடுவோம்  
நன்றி சொல்லி நாளும் பாடுவோம் - கோடி
நன்மை செய்யும் இயேசு இராஐனை
நமது வாழ்க்கையே உயர்ந்த நன்றியாய்
நன்மை நெறியில் நாளும் நடந்து
நலன்கள் யாவும் நட்பில் பகிர்ந்து

விண்ணும் மண்ணுமே காணும் யாவுமே
கடவுள் தந்த கொடைகள் அல்லவா
வலிமை இழந்தவர் வாழ்வில் வசந்தம் பெறுவதும்
வள்ளல் இயேசு தயவில் அல்லவா
அமைதி வரும் அருள் நிறையும்
அவர் வரவில் புது உறவில்
அன்னையைப் போல அன்பு காட்டி
நம்மைக் காக்கும் தேவன் பெயரை

கவலை யாவுமே கலைந்து போகுமே
கண்ணைப்போல இயேசு என்னைக் காப்பதால்
சோகமில்லையே இனி சுகமே எல்லையே
தேற்றும் தெய்வம் தேடி வந்ததால்
சுமைசுமந்த தோள்களுக்கு
சுகம் தருவார் துணை வருவார்
அச்சம் நீக்கி அன்பு தந்து
அருளைப் பொழியும் தேவன் புகழை




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்