Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   971-நன்றி சொல்லி நாளும் பாடிட  
நன்றி சொல்லி நாளும் பாடிட
நித்தம் உந்தன் சித்தம் ஏற்றிட
உந்தன் பாதம் தேடி வருகிறேன்
உனதாய் வாழ என்னைத் தருகின்றேன்
நன்றி நன்றி நன்றி இயேசுவே (3)
நன்றி இயேசுவே

கருவில் என்னைத் தேர்ந்ததற்காக நன்றி இயேசுவே
கருத்தாய் என்னைக் காப்பதற்காக நன்றி இயேசுவே
கரம் பிடித்து நடத்தினாய் கன் மலையில் உயர்த்தினாய்
காலமெல்லாம் நன்றி பாடுவேன்
கர்த்தருக்குள் என்றும் வாழுவேன்
நன்றி நன்றி நன்றி இயேசுவே (3)நன்றி இயேசுவே

துன்ப வேளையில் துணையாய் நின்றீர்; நன்றி இயேசுவே
தூய படைப்பாய் உன்னில் இணைத்தாய் நன்றி இயேசுவே
வானம் விட்டு இறங்கினாய் வரங்களாலே நிரப்பினாய்
வாழ்நாளெல்லாம் நன்றி பாடுவேன்
வல்லவர்க்குள் என்றும் வாழ்வேன்
நன்றி நன்றி நன்றி இயேசுவே (3) நன்றி இயேசுவே






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்