Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   970-நன்றி சொல்லிப் பாடுவோம்  
நன்றி சொல்லிப் பாடுவோம்
நல்லவரை வாழ்த்துவோம்
வல்லவராகுவோம் வளமை காணுவோம் (2)
காலங்கள் நம் கையில்
காயங்கள் கரைகையில் (2)

மண்ணிலே விண்ணகத்தை
மலரச்செய்யும் மனிதராய்
கண்ணிலே தீப்பிழம்மை
கொண்டவர் தாம் கிறிஸ்துவே (2)
ஆணவத்தை அடக்கவே
அலை அலையாய் செல்லுவோம் (2)
காலங்கள் நம் கையில்
காயங்கள் கரைகையில் (2)

சாதிகள் பேதங்கள்
சந்தி தோறும் மோதல்கள்
சரித்திர நாயகனின்
சாட்சியத்தால் சரியுமே (2)
செல்லரிக்கும் சூழலை
செயல்வழியில் மாற்றுவோம் (2)
காலங்கள் நம் கையில்
காயங்கள் கரைகையில் (2)






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்