Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   969-நன்றி சொல்லிப் பாடிடுவோம்  
நன்றி சொல்லிப் பாடிடுவோம்
நன்மை செய்த தேவனையே - 2
நாமெல்லாம் காத்து நடக்கும் இறைவனை
நலமெல்லாம் ஈந்து மகிழும் நாதனை

கரத்தில் நமது பெயரைப் பொறித்து
கண்ணின் மணியாய் காக்கின்றார்
கல்லிலும் கால்கள் மோதாதபடியே
கரம் பிடித்து நம்மை நடத்துகிறார்
வலப்புறம் ஆயிரம் விழந்தாலும்
இடப்பறம் ஆயிரம் விழுந்தாலும்
தீமைகள் அணுகாது காத்திடுவார்

கருணையும் இரக்கமும் புரிந்தே நாளும்
தயவுடன் நம்மை நடாத்துகின்றார்
நன்மைகளால் நம் வாழ்வை நிரப்பி
நலமுடன் நம்மை வழி நடத்துகின்றார்
அவரே புகலிடமாயுள்ளார்
அவரை எந்நாளும் போற்றிடுவோம்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்