Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   968-நன்றி சொல்ல  

நன்றி சொல்ல ...வார்த்தை இல்லை என்னிடத்திலே
நீ செய்த ...... நன்மை கோடி எந்தன் வாழ்விலே
சோகங்கள் சூழும் வேளையில் உன் கரம்
கொடுத்தென்னைத் தேற்றினாய்
இறைவா..... இறைவா..... (3) இறைவா....

நான் என்று சொன்னாலே நீ ஆகின்றாய்
உயிரோடு உயிராய் என்னில் உறவாகின்றாய் (2)
பாதங்கள் தடுமாற பாதைகள் ஆகினாய்
நீ சென்ற வழிதனில் என் வாழ்வு தொடர

நீங்காத சுமை யாவும் நீ தாங்கினாய்
விழியுள்ளே மணியாக எனைப் பூட்டினாய் (2)
உன் அன்பு சுகம் தன்னில் நான் என்றும் வாழவே
உயிருள்ள வரையிலும் உன் அன்பைக் கேட்பேன்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்