Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   967-நன்றி கூறுவோம் நாளும் பாடுவோம்  
நன்றி கூறுவோம் நாளும் பாடுவோம்
அன்பர் இயேசு எந்தன் வாழ்வில்
மையமென்று வாழ்த்திப் பாடுவோம்
வளங்கள் யாவுமே தந்து நம்மையே
வாழ வைக்கும் வள்ளல் என்று வாழ்த்திப் பாடுவோம் (2)

வழிகாட்டி வாழவைத்த இறைவன் அவரே
வானரசு மண்ணில் வர அழைத்தார் நம்மையே (2)
வாழும் போது மனிதம் மலர ஒன்று கூடுவோம் -- (2)
இறைவன் இயேசு வாழ்ந்த வழியில் நாமும் செல்லுவோம்
வளங்கள் யாவுமே தந்து நம்மையே
வாழ வைக்கும் வள்ளல் என்று வாழ்த்திப் பாடுவோம் (2)

மனித நேயம் நம்மில் நாளும் மலரச் செய்யவே
நெறிகள் தந்து நமது வாழ்வை ஒளிரச் செய்யவே (2)
உயர்வு தாழ்வு என்னும் கீழ்மை நம்மில் மறையவே -- (2)
உரிமை வாழ்வு நம்மில் என்றும் நிலைத்திடச் செய்வோம்
வளங்கள் யாவுமே தந்து நம்மையே
வாழ வைக்கும் வள்ளல் என்று வாழ்த்திப் பாடுவோம் (2)





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்