Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   966-நன்றி கூறுவேன் நல்ல தேவனே - 2  
நன்றி கூறுவேன் நல்ல தேவனே - 2
நீ செய்த செயல்களுக்காய்
நன்றி கூறுவேன் (2)
நன்றி என்றும் நன்றி - 4

ஆற்றலை நீ தந்தாய் ஆளுமை நீ தந்தாய்
ஆன்றோனாய் வாழ நீ ஆன்ம நலம் தந்தாய் (2)
துன்ப நேரம் தேடி வந்து கரம் பிடித்து நின்றாய் - 2
சோதனைகள் வேதனைகள் நீக்கி மகிழ்ச்சி தந்தாய் - 2
நன்றி என்றும் நன்றி - 4

அன்பினை நீ தந்தாய் அருளினை நீ தந்தாய்
அன்புடனே வாழ நீ வழிமுறைகள் தந்தாய் (2)
தேவையறிந்து தேடிவந்து தியாக மழை பொழிந்தாய் - 2
இல்லாமை இல்லாத வாழ்வினை நீ தந்தாய் - 2
நன்றி என்றும் நன்றி - 4





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்