Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   962-நன்றி என்றும் பாடுவேன்  


நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே
நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பை பாடியே - 2
கோடி நன்றி பாட்டு பாடுவேன்
காலமெல்லாம் வாழ்த்து கூறுவேன்

உயிர்கள் யாவும் வாழ நல் உலகைப் படைத்ததால்
உறவு வாழ்வு வளர உன் உள்ளம் உறைந்ததால்
நிஜங்கள் யாவும் நிலைக்க நற் செய்தி தந்ததால்
நிழல்கள் துன்பம் மறைய திரு விருந்து அளித்ததால்
பகிர்ந்து வாழ்வில் வளர நல் மனதைக் கொடுத்ததால்
பரமன் அன்பில் வாழ அருள் வரங்கள் பொழிந்ததால்

பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னைச் சேர்த்ததால்
ஜெபித்து நின்று வேண்டும்போது என்னைக் காப்பதால்
நேசக்கரத்தை நீட்டி வந்து நன்மை செய்வதால்
துன்ப துயரை பனியைப்போல விலக வைப்பதால்
உண்மை அன்பில் உள்ளம் மகிழ தந்ததால்
உந்தன் ஒளியே உலகின் வழியாய் ஆனதால்





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்