961-நன்றி என்று சொல்லி |
நன்றி என்று சொல்லி - எந்தன் நெஞ்சம் உன்னில் வாழும் எந்த நாளும் உந்தன் அன்பை தேடும் அது துள்ளி வரும் தென்றலிலே புத்தம் புது கவி நூறு மன்னவனின் புகழினைப் பாடும் (2) விழியினில் தொடர்ந்திடும் ஏக்கம் - அது கதிர் கண்ட பனி போல மாறும் (2) இதயத்தில் இனிய ராகங்கள் உதயம் ஆகுமே உள்ளங்களில் நீ வாழ உறவுகள் தான் கூட உன் வாசல் தேடி வருவேன் என் மன்னவனே உருவத்தில் தெரிகின்ற தெய்வம் - நம் இதயத்தில் வாழ்ந்திட வேண்டும் (2) மனிதரில் தெய்வம் வாழ்ந்திடும் கோவில் ஆகுமே புத்தம் புது பூமி ஒன்று நீயும் வந்து வாழ இன்று உன் வாசல் தேடி வருவேன் என் மன்னவனே |