960-நன்றி என்ற வார்த்தைக்கு |
நன்றி என்ற வார்த்தைக்கு பொருள் என்னவோ இறைவா பொங்கும் உந்தன் கருணைக்கு அளவில்லையோ தலைவா (2) நன்றி பாடும் நாள் வந்ததே - இனி நன்றி மட்டும் எந்தன் நெஞ்சிலே (2) நீயில்லா சிறுபொழுதும் வீணானதே நீ வந்ததால் என்னுள்ளம் மகிழ்வானதே (2) நீயின்றி என் வாழ்வில் பொருளில்லையே நீ மட்டும் என் சொந்தம் எப்போதுமே (2) நன்றி பாடும் நாள் வந்ததே - இனி நன்றி மட்டும் எந்தன் நெஞ்சிலே (2) நீரில்லா புவி உழுதும் வீணாகுமே நீயின்றியோ என் நெஞ்சம் பாழாகுமே (2) நீ வந்து என் வாழ்வில் அருள் தந்ததால் வான் முட்டும் என் பாடல் எப்போதுமே (2) நன்றி பாடும் நாள் வந்ததே - இனி நன்றி மட்டும் எந்தன் நெஞ்சிலே (2) |