Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

நன்றிப்பாடல்கள்   தெய்வீக ராகங்கள் பாடு  


தெய்வீக ராகங்கள் பாடு தேவாதி தேவன் நம்மோடு - 2
இசையோடு புகழ் பாடு உன் தேவன் என்றும் உன்னோடு

இறைவா உன் அன்பில் இசைப்பாடும் இதயம்
இனிதாகும் என்றும் என் வாழ்வில் உதயம் (2)
மாறா உன் அருளில் நான் வாழவேண்டும் -2
மன்னா உன் புகழை தினம் பாட வேண்டும்

ஒளி வீசும் நிலவே அருள் சேர்க்கும் ஒளியே
மணம் வீசும் மலரே இறை இயேசு ராஜா (2)
குறையாத வளமும் நிறைவான வாழ்வும் -2
நிதம் தந்து காக்கும் இறை இயேசு தேவா





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்