Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   953-ஒன்றாக நாம் இன்று புகழ்ந்திடுவோம் - 2  

ஒன்றாக நாம் இன்று புகழ்ந்திடுவோம் - 2
நல்ல நாளுக்காக நன்றி கூறிடுவோம்
ஒன்றாக நாம் இன்று புகழ்ந்திடுவோம்
எல்லோரும் குரல் எழுப்பி
எந்நாளும் துதித்திடுவோம் (2)
நம்யேசு ராஜாவுக்கு நன்றிப்புகழ் பாடிடுவோம்

அன்பான தேவன் காக்கும் நல் மேய்ப்பன்
அவருக்கு நன்றி சொல்வோம் (2)
படைப்பின் இறைவன் உலகத்தின் ராஜன்
இவருக்கு நன்றி சொல்வோம் (எல்லோரும்...)

அன்பான குடும்பம் பண்பான மனங்கள்
அனைத்திற்கும் நன்றி சொல்வோம் (2)
தோள் தரும் தோழர் துணை நிற்கும் நண்பர்
இவர்க்கெல்லாம் நன்றி சொல்வோம் (எல்லோரும்...)





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்