Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   952-ஒன்றாக கூடி வந்து  


ஒன்றாக கூடி வந்து பாடும் நேரம்
இது நன்றியை மாலை கட்டி சூடும் நேரம்
ஆண்டவர் படைத்த நாளிது இன்று - 2
அன்போடு உறவாடி சேரும் நேரம்
கூடிவருவோம் நன்றி கூறிவருவோம் இன்று
உள்ளத்தின் உறவுப் பூவைத் தூவி மகிழ்வோம் - 2
உள்ளத்தின் உறவுப் பூவைத் தூவி மகிழ்வோம்

இறையன்பு இணைக்கின்ற குலமாகினோம்
பிறரன்பில் வாழுகின்ற பிறப்பாகினோம்; (2)
அன்பென்னும் புதுவாழ்வின் ஆடை அணிவோம் - 2
ஆனந்தப் பண்பாடி கொண்டாடுவோம்
கூடிவருவோம் நன்றி...

குரல் வேறு ஆனாலும் பா ஒன்று தான்
உடல் வேறு ஆனாலும் மனம் ஒன்று தான் (2)
இனம் வேறு குலம் வேறு என்பவையெல்லாம் - 2
இயேசுவுக்குள் வந்த நம்மில் இல்லை என்போம்
கூடிவருவோம் நன்றி...





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்