Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   951-ஒன்று கூடி நன்றி கூறுவோம்  
ஒன்று கூடி நன்றி கூறுவோம்
இந்த நாளில் நன்றி கூறுவோம்
இறைவன் தந்தைக்கு யுபிலி ஆண்டிலே
மகிழ்ந்து ஒன்றாய்ப் புகழ்ந்து பாடுவோம் (2)

உலகைப் படைத்து நமக்குத் தந்த
அன்புத் தந்தைக்கு
மகனை அனுப்பி நம்மை மீட்ட
தியாகத் தந்தைக்கு
ஆவி அளித்து மகவாய் ஏற்ற
நல்ல தந்தைக்கு
இருளில் இருந்து ஒளிக்கு அழைத்த
வல்ல தந்தைக்கு

தாய் மறந்தும் நம்மை
மறவா தாயுமானவர்க்கு
தாலாட்டி தமது மகனை
உணவாய்த் தந்தவர்க்கு
தோளில் தூக்கி முத்தம் பொழியும்
பாசத் தந்தைக்கு
தொலைவில் இருக்கும் நம்மை நினைத்து
ஏங்கும் தந்தைக்கு





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்