950-ஒவ்வொரு நாளும் |
ஒவ்வொரு நாளும் பல்வேறுவிதமாய் அன்போடு என்னைக் காத்து என்னோடு இருந்து என்னை வழிநடத்தும் இறைவா உமக்கு நன்றி - 3 ஒரு புன்னகை புரியும் குழந்தையை நினைத்தால் கவலைகள் மறக்குதையா - பல கவிதைகள் பிறக்குதையா எந்தச் சின்னச் செயலிலும் ஈடுபட்டுழைத்தால் மனதுக்கு மகிழ்ச்சியையா இறையரசங்கே மலருதையா வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவினிலும் வழி நடத்தவேண்டும் இயேசையா உன் திருவாய் மலர்ந்து அருளிய வார்த்தைகள் நெஞ்சத்தில் நிறைந்ததையா என்னில் நிம்மதி பிறந்ததையா உந்தன் திருமுக ஒளியில் என் மனக்காயங்கள் யாவும் மறைந்ததையா என்னால் மன்னிக்க முடிந்ததையா வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவினிலும் வழி நடத்தவேண்டும் இயேசையா |