948-ஒளிமிக்க ஆண்டவரின் திரு முன்னே |
ஒளிமிக்க ஆண்டவரின் திரு முன்னே சூழ்ந்து நின்று நன்றி பாடுவோம் (2) வாழ்கையின் அன்றாட நிகழ்சிகளில் அவர் பிரசன்னமாவதை கண்டுணர்வோம் செருக்குற்றோரை அவர் அழிக்கின்றார் சிறுமையுற்றோரை அவர் உயர்த்துகின்றார் அவரே தீர்ப்பளிக்கும் கடவுள் என்றார் (2) அவருக்கஞ்சுவோர் நீடு வாழ்வார் பொருத்தனை செய்தே புகழ்ந்திடுவோம் இதயத்தை அவர்க்கே தந்திடுவோம் (2) ஏழை எளியவரில் வாழ்கின்றார் - 2 என்பதை என்றும் நாம் உணர்வோம் |