Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   946-ஒரு கோடி பாடல்கள்  


ஒரு கோடி பாடல்கள் நான் பாடுவேன் - அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் - உந்தன்
புகழ் பாடிப் புகழ் பாடி நான் வாழுவேன்

மணவீணை தனை இன்று நீ மீட்டினாய் -அதில்
மலர்ப்பாக்கள் பல கோடி உருவாக்கினாய்
என் வாழ்வும் ஒரு பாடல் இசைவேந்தனே அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை யேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை யேசுவே (2)

இளங்காலைப் பொழுதுந்தன் புகழ் பாடுதே அங்கு
விரிகின்ற மலருந்தன் புகழ் பாடுதே
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் - வந்து
கரை சேரும் நுரை யாவும் கருணை மனம்
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை யேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை யேசுவே (2)






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்