945-என்னோடு இயேசு இருக்கின்றார் |
என்னோடு இயேசு இருக்கின்றார் எனக்குப் பயமில்லை - இன்று என்னோடு இயேசு இருக்கின்றார் எனக்குப் பயமில்லை இருளில் நடக்க நேர்ந்தாலும் அஞ்சாதே என்று அருகிருப்பார் (2) உன்னை உறுதி செய்திடுவேன் உன் துணை நான் என்று சொல்கின்றார் (2) இந்த இயேசு நல்லவரே இந்த இயேசு வல்லவரே (2) இன்று... உதவிகள் செய்து உனைக் காப்பேன் உன்னை என் வலக்கையால் தாங்கிடுவேன் (2) கைகளில் உன்னைப் பொறித்துள்ளேன் கலங்காதே மகனே என்றுரைத்தார் (2) இந்த இயேசு நல்லவரே இந்த இயேசு வல்லவரே (2) இன்று... |