944-என்னை இயேசுவுக்குப் பிடிக்கும் |
என்னை இயேசுவுக்குப் பிடிக்கும் எனவே என்னை அன்பு செய்தார் அவர் கண்களில் விலையேறப் பெற்றவள் நான் எண்ணில்லா வரங்களால் என்னை ஆசீர்வதித்தார் என்றும் ஆசீர்வதிப்பார் பாவியாம் எனை மீட்க சிலுவையில் அறையுண்டு உயிரைத் தந்தார் மாட்சியில் நான் வாழ மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என் இயேசு நல்லவர் என் இயேசு வல்லவர் அவர் அன்பு செய்வதாலே எனக்கினி கவலை இல்லை ஆபிரகாமைப்போல நான் நம்பிக்கை கொண்டு வாழச் செய்தார் அகிலமே நம்பாத மாபெரும் செயல்கள் நடக்கச் செய்தார் என் இயேசு நல்லவர் என் இயேசு வல்லவர் அவர் அன்பு செய்வதாலே எனக்கினி கவலை இல்லை |