Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   932-  


என்னில் வந்த நாதனுக்கு
என்னைக் காக்கும் தேவனுக்கு
நெஞ்சார என்றும் நன்றி சொல்வேன்
வாழ்வளித்த வள்ளலுக்கு
வாழ்வளிக்கும் இயேசுவுக்கு
வானெங்கும் முழங்க நன்றி சொல்வேன்
நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன் - 2

பாவங்களைப் போக்கினார் நன்றி சொல்வேன்
பயமதை நீக்கினார் நன்றி சொல்வேன்
பரிவுடன் நோக்கினார் நன்றி சொல்வேன்
பாதைகளைக் காட்டினார் நன்றி சொல்வேன்
உண்மை அன்பு நீதியை உணரச் செய்த இயேசுவை
உளமாரப் பாடியே நன்றி சொல்வேன்

எளியவரை நோக்கினார்
ஏழைகளை நேசித்தார்
அடிமைகளின் விலங்கொடித்தார்
அடியவரின் குரல் கேட்டார்
உரிமை தரும் வேள்வியை உணரச் செய்த இயேசுவை
ஆடியே பாடியே நன்றி சொல்வேன்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்