941-என்னிடம் எழுந்த யேசுவே |
என்னிடம் எழுந்த யேசுவே உமக்கு அன்பு ஆராதனை நன்றியும் என்றும் 2 பரலோகவாசிகள் அருமையாய் உம்மை புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த நீசனாம் என்னிடம் எழுந்தது ஏனோ நேசமும் அதிசய இரக்கமும் அல்லோ மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென ஆசையாய் யேசுவே விசுவசித்துமக்கு பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன் சீரிய திருவுள்ளம் பிறழாது வளர இயேசுவே உந்தன் அரசெங்கும் விளங்க நேசமாய் அருள வேண்டுகின்றோமே ஆசீரருளுமென் தாய் தந்தை சோதரர் சோதரி நண்பர் சுற்றமெல்லோர்க்கும் பேருதவி செய்வோர் பகைமையில் உழல்வோர் பாவிகள் மரித்தோர் திருச்சபையோர்க்கும் |