Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   940-என்ன சொல்லிப் பாடுவேன்  

என்ன சொல்லிப் பாடுவேன்
என்ன சொல்லிப் போற்றுவேன்
எனக்குச் செய்த நன்மை எண்ணியே - இறைவா
எனக்குச் செய்த நன்மை எண்ணியே

என்ன சொல்லிப் பாடியும்
என்ன சொல்லிப் போற்றியும்
ஈடு இணை உமக்கு இல்லையே - ஐயா
ஈடு இணை உமக்கு இல்லையே
நன்றி தந்தையே நன்றி யேசுவே
வழி நடத்தும் தூய ஆவியே

கண்ணீர் துடைத்ததை சொல்லிப் பாடவா
கவலையில் அணைத்ததை சொல்லிப் பாடவா
வீழ்ந்தேன் தூக்கியதை சொல்லிப் பாடவா
சாய்ந்தேன் தாங்கியதை சொல்லிப் பாடவா
நன்றி தந்தையே நன்றி யேசுவே
வழி நடத்தும் தூய ஆவியே

வாழ்வு தந்ததை சொல்லிப் பாடவா
வளமை தந்தை சொல்லிப் பாடவா
ஊக்கம் தந்ததை சொல்லிப் பாடவா
உறுதி செய்ததை சொல்லிப் பாடவா
நன்றி தந்தையே நன்றி யேசுவே
வழி நடத்தும் தூய ஆவியே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்