939-என் தேவா நன்றி |
என் தேவா நன்றி - எந்நாளும் நன்றி என்னைப் படைத்த தேவா நன்றி என்னை அழைத்த தேவா நன்றி நன்றி இயேசுவே (4) இந்த நாளில் உந்தன் ஆசி நிறைவாய் அளித்தாய் நன்றி எந்த நாளும் என்னைக் காக்கும் அரணாய் அமைந்தாய் நன்றி இந்த பூமியில் உந்தன் புதுயுகம் படைத்தாய் நன்றி (2) உந்தன் உடலை எங்கள் உணவாய் அளித்தாய் நன்றி (2) துன்பம் நாளும் சூழும்போதும் துணையாய் இருந்தாய் நன்றி பந்த பாசம் நீங்கும் போதும் உறவாய் இணைந்தாய் நன்றி எந்தன் திறமைகள் உந்தன் பணிக்காய் ஏற்றாய் நன்றி உந்தன் உயிரை எந்தன் உயிர்க்காய் அளித்தாய் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி |