938-என் தெய்வம் உன்னன்பு |
என் தெய்வம் உன்னன்பு தெரிந்ததிங்கே என் நெஞ்சம் மகிழ்வாலே நிரம்பிடுதே என் யேசுவே எந்நாளுமே உன் பாடல் நான் பாடுவேன் (2) துன்பம் வரும் நேரம் சிறு பொழுதேனும் நீயென்னை பிரிவதில்லை என்னில் வந்து நீயும் பேசிடும் போது தனிமையே தெரிவதில்லை (2) நீ தானே எந்நாளும் துணையே (என் வாழ்வில் இனியில்லை குறையே - 2) எண்ணில்லாத குறைகள் என்னிடத்தில் இருந்தும் நீயென்னைத் தெரிந்தெடுத்தாய் அன்பிற்காக ஏங்கும் எந்தனுள்ள ஏக்கம் நீ தானே புரிந்து கொண்டாய் (2) உன்னாலே என் வாழ்வில் மகிழ்வே (உண்டாகும் பேரின்ப உறவே - 2) |