Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   937-என் உள்ளம் கவியொன்று பாடும்  
என் உள்ளம் கவியொன்று பாடும்
உன்தன் அன்பொன்றே அது என்றும் நாடும்
இன்பங்கள் நதியான வெள்ளம்
இதயத்தை சூழ்ந்தோடிக்கொள்ளும்
ஆனந்தக் கவி பாடி துள்ளும் - 2

உன்னோடு ஒன்றாகும் நேரம்
உலகங்கள் சிறிதாகிப்போகும்
நானென்பதெல்லாமே மாறும்
பிறர் சேவை உனதாக ஆகும்
எல்லாமே சமமாய் எல்லோரும் நலமாய் - 2
அன்பொன்றே ஆதாரமாகும்
விண் இன்று மண்மீது தோன்றும்

பிறர் காணும் இன்பங்கள் எங்கள்
இதயத்தை இசைமீட்டிச் செல்லும்
வரமென்று உனைக் கேட்பதெல்லாம்
உறவெம்மில் உயிர் வாழத்தானே
என் வாயலன்று உன் சாயல் இன்று 2
உன்முன்னே யாமெல்லாம் ஒன்று
என்றாகும் நன்னாளும் தோன்றும்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்