936-என் இறை தேவனை |
என் இறை தேவனை என்னுயிர் நாதனை என்றென்றும் புகழ்வேன் உறவுகள் வளர்ந்திட இதயங்கள் இணைந்திட புகழ் பாடுவேன் உன்னோடு நான் உறவாடுவேன் உன்னன்பில் நான் உயிர் வாழுவேன் நன்றி நன்றி நன்றி என்று பாடும் நேரமே இமையாக நீ... விழியாக நீ உன் பாதை செல்வேனே நான் உயிராக நீ... உறவாக நீ நாளெல்லாம் உனைப் பாடுவேன் தினமும் என்னை நீர் வளமாய்ச் செய்தீர் எந்நன்றி நான் சொல்லுவேன் (2) பிறப்பாக நீ... உயிர்ப்பாக நீ உன் வாழ்வில் கலந்தேனே நான் அன்பாக நீ... அரவணைப்பாய் நீ உன் நாமம் சொல்வேனே நான் பிறையாய் வளர்வாய் அருளைப் பொழிவாய் உன் அன்பில் நான் வாழுவேன் (2) |