935-எந்நாளும் நான் ஆண்டவரைப் |
எந்நாளும் நான் ஆண்டவரைப் போற்றுவேன் எப்போதும் நான் அவர் புகழைப் பாடுவேன் போற்றிடுதே புகழ்ந்திடுதே - 2 என் ஆன்மா தினம் பணிந்திடுதே மகிழ்ந்திடுதே அவர் பாதமே என் உள்ளம் பெருமை கொள்ளுதே எளியவர் உள்ளம் துள்ளுதே (2) எல்லோரும் இணைந்து கொள்ளுங்கள் என்றுமே மகிழ்ந்து போற்றுங்கள் (2) தினம் பணிந்திடுவோம் மகிழ்ந்திடுவோம் அவர் பாதமே இயேசு இயேசு இயேசுவே - 4 உம் துணை நிதம் நாடினேன் தூயவர் நாமம் சாற்றுவேன் (2) துன்பத்தில் நான் துவண்டாலும் துணிவாய் உமைப் போற்றுவேன் (2) தினம் பணிந்திடுவோம் மகிழ்ந்திடுவோம் அவர் பாதமே இயேசு இயேசு இயேசுவே - 4 |