934-எந்தன் நெஞ்சம் பாடும் |
எந்தன் நெஞ்சம் பாடும் உந்தன் கவிதை ஆயிரம் எந்தன் வாழ்வில் காண்பேன் உந்தன் கொடைகள் ஆயிரம் (2) உன்னைப் பார்த்தேன் உன்னில் மகிழ்வேன் - தினம் உந்தன் புகழைப் பாடிப்பாடி உள்ளம் மகிழுவேன் நன்றி இறைவா - 2 நன்றி நன்றி நன்றி இறைவா சுரமிசைக்கும் யாழாக எனை மீட்டினாய் சுகமான நினைவுகளில் எனை நடத்தினாய் (2) நெஞ்சம் பாடும் உனைப் பாடும் உனது நினைவு எனது நெஞ்சம் மகழ்ந்து பாடிடும் நன்றி இறைவா - 2 நன்றி நன்றி நன்றி இறைவா மணம் வீசும் மலராக எனை மாற்றினாய் மதியாகும் அகல் போல எனை ஏற்றினாய் (2) குறை நீங்கும் நலமாகும் உனது வழியில் எனது நெஞ்சம் ஆடிப்பாடிடும் நன்றி இறைவா - 2 நன்றி நன்றி நன்றி இறைவா |