933-எந்தன் உள்ளம் வந்த தேவனே |
எந்தன் உள்ளம் வந்த தேவனே நன்றியோடு என்றும் பாடுவேன் - 2 இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா உன்னையன்றி யாரைப் பாடுவேன் நன்றிமலர் உனக்குச் சூடுவேன் உன்பாதை நான் செல்லும் பயணங்களில் தடை கோடி வரும் போது எனைத் தாங்கினாய் - 2 உனைப்போல நான் வாழத் துடிக்கின்ற வேளை - 2 கரம் நீட்டி ஒளி காட்டித் துணையாகினாய் அஞ்சாத நெஞ்சோடு உனில் வாழவே உன்னையன்றி யாரைப் பாடுவேன் நன்றிமலர் உனக்குச் சூடுவேன் எனைச் சூழ்ந்த இருளெல்லாம் ஒளியாக்கினாய் அருள் தந்து என் வாழ்வின் வழியாகினாய் - 2 கரை தேடும் படகாகத் தவிக்கின்ற போது - 2 கலங்கரை விளக்காகச் சுடர் வீசினாய் உயிரான உணவாக உறவாகவே உன்னையன்றி யாரைப் பாடுவேன் நன்றிமலர் உனக்குச் சூடுவேன் |