932-எந்தன் இயேசு ராஐனுக்கு |
எந்தன் இயேசு ராஐனுக்கு கோடி பாடல் பாடுவேன் கவிதைகளால் மாலை சூடுவேன் வானம் போல மனது கொண்ட மன்னவராம் நல்லவர்க்கு காலமெல்லாம் பாட்டுப்பாடுவேன் கண்களை மூடியே கர்த்தரை வேண்டினேன் கண்ணின் மணிபோல் என்னைக் காத்திட்டார் எல்லாமே முடிந்ததென்று நொந்து மனம் வேண்டினேன் -2 தேடி வந்து தேவன் என்னைத் தேற்றினார் 2 துதித்துப் பாடுவேன் போற்றிப் பாடுவேன் இனிய நேசனை தினமும் வாழ்த்துவேன் துன்பம் சூழ்ந்த வாழ்விலே சோர்ந்து போன என்னையே தூயவராம் யேசுராஐன் தாங்கினார் என்ன துன்பம் வந்தாலும் கலக்கம் எனக்கு இல்லையே - 2 கர்த்தர் எனது மீட்பும் பலமும் ஆனதால் - 2 துதித்துப் பாடுவேன் போற்றிப் பாடுவேன் இனிய நேசனை தினமும் வாழ்த்துவேன் |