Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   931-எந்தன் இதயம் பாடும் நேரம்  
ஆ.....ஆ.......ஆ......ஆ......
எந்தன் இதயம் பாடும் நேரம்
எங்கும் ஆனந்தம் - உன்
உறவில் கலந்தேயான் - உந்தன்
புகழைப் பாடுவேன் - உந்தன்
அன்பும் அருளுமே - எந்தன்
இனிய வாழ்வின் கீதங்கள் ஆ.....ஆ......

எந்தன் இதயக் குகையிலே
உன் இராகங்கள் கேட்குதே (2)
பொங்கும் காண மழையிலே
என்றும் உள்ளம் நனையுதே
மலரின் மணமாம் யேசுவே
பலரும் போற்ற வாழ்த்துதே
உன் அன்பும் உன் அருளும் என்னிடத்தில் கூட
உன் உயிரில் நான் கலந்து உன் புகழைப் பாட

பாயும் நீரின் நடுவிலே
என் வாழ்வின் ஓடங்கள் (2)
மின்னும் தூர ஒளியினைக்
கண்டும் உள்ளம் கலங்காதே
ஒளியின் ஒளியாம் இயேசுவை
உணர்ந்தே ஓடம் செலுத்துவேன் (உன் அன்பும்...)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்